ஒரு திகிலான மனோதத்துவ தேர்வு !!!
கீழுள்ளதை மிக கவனமாக படித்து விட்டு இறுதியில் கேட்கப்பட்டிருக்கும் வினாவுக்கு நேர்மையான விடை தாருங்கள் !!!
இது நீங்கள் அறியா(!) உங்கள் குணாதசியத்தை அறிந்து கொள்ள நிச்சயம் உதவும்.
ஓர் இளம்பெண், தன்னுடைய தாயின் இறுதிச் சடங்கில் முன் அவள் பார்த்திராதா/அறியாத ஓர் ஆடவனைச் சந்தித்தாள். தான் சந்தித்த ஆடவர்களிலேயே அவன் தான் சிறந்தவன் என்றும், தன் கனவுக் காதலன் என்றும் தீர்மானித்து அவன் மேல் உடனே காதல் கொண்டாள் !!! துரதிருஷ்டவசமாக அவள் அவன் முகவரியையோ, தொலைபேசி எண்ணையோ கேட்டு வாங்க மறந்து போனாள். அவள் எவ்வளவு முயன்றும் அவளை வசீகரித்த அந்த வாலிபனை அவளால் கண்டுபிடிக்க இயலவில்லை. மிகுந்த
கவலைக்குள்ளானாள் ! பசலை நோய் அவளை வாட்டியது !
சரியாக 7 நாட்களுக்குப் பின் அந்த இளம்பெண் தன் அருமைத் தங்கையை கொலை செய்தாள் !!!!!
கேள்வி: அவ்விளம்பெண் தன் தங்கையை கொலை செய்யுமளவுக்கு என்ன நடந்திருக்கும் ? எது அக்கொலைக்கு தூண்டுதலாக அமைந்திருக்கும் ?
குறிப்பு: இக்கேள்விக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சிறந்த விடைகள் உண்டு !!!!!!
நன்றாக சிந்தித்து விட்டு நீங்கள் தரப்போகும் நேர்மையான பதில் உங்களைப் பற்றி நீங்கள் சரியாக அறிந்து கொள்ள வழி செய்யும் !!!
இக்கேள்விக்கான விடைகளை தனிப்பதிவில் (நாளை) சொல்கிறேன்!
வலைப்பதிவு நண்பர்கள் தங்கள் விடையை பின்னூட்டத்தில் பதியவும்.
இத்தேர்வு குறித்து ஏற்கனவே படித்தறிந்த வலைப்பதிவாளர்கள், தயவு செய்து இதில் கலந்து கொள்ள வேண்டாமே !
என்றென்றும் அன்புடன்
பாலா
12 மறுமொழிகள்:
சரிங்க பாலா நான் கலந்துக்கலை. ஆனா படிச்சி முடிச்சப்றம் இப்படிக் கூட சிந்திக்கற ஆளுங்க இருக்காங்களான்னு தொனுச்சி.
சத்தியமா அந்தக் கோணத்துல என்னால சிந்திக்க முடியலை
ச்சும்மா இருக்கலாமுன்னாலும் கை துருதுருக்குதே!
அந்தத் தங்கையின் காதலனாக அந்த
இளைஞன் இருந்திருப்பானோ?
துளசி.
my guess goes here,
the guy and the gal's sister are lovers and they killed the gals mother since she didn't agree for their marrige..
i can't think more than this. :)
ஏற்கனவே தெரியும், அதனாலே நோ COMMENTS..
துளசியக்கா மாதிரி தான் நானும் முதல்ல விடை சொன்னேன்.. அப்புறம் தான் தெரிஞ்சது...
ஐயகோ, என் செய்வேன்;
நான் இங்கு 4-வதாக வந்து பின்னூட்டம் போட்டிருந்தேன்; காணவில்லையே. Blogger சதி செய்கிறதே.
- ஞானபீடம்.
தாயின் இறுதிச் சடங்குக்கு வந்த ஆடவன், தாய் பெற்ற பிள்ளையாகிய தனது தங்கையின் இறுதிச் சடங்குக்கு அவன் வருவான் என்ற நம்பிக்கையில் தனது தங்கையைக் கொலை செய்து இறுதிச் சடங்கிற்கு ஏற்பாடு செய்கிறாள் அவ்விளம்பெண்!
"வூட்டுல எழவு உழுந்தா, அவன் வர்றான்;
சரி அவன வரவக்கனும்னா,
இன்னோரு எழவு உழனும் வூட்ல,
கொல்லு, தங்காச்சிய, அவன் வருவான்ல"
அப்டீன்னு நெனச்சு தங்கச்சிய கொன்னுட்டா.
7நாளு எதுக்கு வெயிட் பண்ணா, 8ம்நாள் கருமாதிக்கா இருக்குமே.
நான் 'ஆளவந்தானா?'
எனக்கு 'காதல் கொண்டேன்' தனுஷ் மனநிலையாக இருக்குமோ?!!?!
- ஞானபீடம்.
ஞானபீடம்,
நீங்கள் இட்ட பின்னூட்டம் என் மின்னஞ்சலிருந்து இருந்ததால், அதை மறுபதிவு செய்துள்ளேன் !
இத்தேர்வில் பங்கெடுத்த நண்பர்களுக்கு நன்றி ! சும்மா லுக் விட்டுப் போனவர்களுக்கும் நன்றி :) தனிப்பதிவில் விளக்குகிறேன் !!!
என்றென்றும் அன்புடன்
பாலா
கோடானுகோடி நன்றிகள் பாலா!
Blogger செய்த சதியா, இல்லே வேற எதுனா(!) காரணமானு தெரில. ஆனாலும் நீங்க என்னோட எழவு கமெண்ட்ட மறுபதிவு செஞ்சதுக்கு மறுபடியும் ரொம்ப நன்றிங்க!.
ஆனா மறக்காம, என்னோட சைக்கோ பர்சனாலிட்டி பத்தி கண்டிப்பா ஒரு முடிவு சொல்லிடுங்க.
- ஞானபீடம்.
அபு முஹைபும் ஞானபீடமும் சொன்ன அதே பதில்தான்.
இந்த விடை தப்புன்னு சொல்லி எடாகூடமா எதாவது எழுதினா அப்புறம் உண்மைய தெரிஞ்சிக்க
ஒரே வழி...இந்த விடுகதைய பதிவு பண்ணின பாலாவை போட்டுத்தள்ளிட்டு அதப் பார்க்க வரப்போற அந்த ஆள்,அந்தப் பெண் ரெண்டு பேர்கிட்டயும் கேட்டுர வேண்டியதுதான்.
அன்புடன் ...ச.சங்கர்
ஐயா சங்கரரே,
//ஒரே வழி...இந்த விடுகதைய பதிவு பண்ணின பாலாவை போட்டுத்தள்ளிட்டு அதப் பார்க்க வரப்போற அந்த ஆள்,அந்தப் பெண் ரெண்டு பேர்கிட்டயும் கேட்டுர வேண்டியதுதான்.
//
நீங்கள் 'சிறந்த' பதில் தந்திராவிட்டாலும், விடையை தெரிந்து கொள்வதற்காக நீங்கள் பரிந்துரைக்கும் செயலே, நீங்கள் ஒரு சிறந்த "சைக்கோ" சிந்தனையாளர் (!) என்பதை தெளிவாக நிரூபிக்கிறது ;-)
ஞானபீடம்,
//ஆனா மறக்காம, என்னோட சைக்கோ பர்சனாலிட்டி பத்தி கண்டிப்பா ஒரு முடிவு சொல்லிடுங்க.
//
தனிப்பதிவைப் பாருங்கள் !!!
http://balaji_ammu.blogspot.com/2005/07/blog-post_08.html
உங்களை நினைச்சா கொஞ்சம் திகிலாத் தான் இருக்கு ;-)
ஆகா மிஸ் பண்ணிட்டேனே... நான் எச்சாட்லி நம்ம ஞான்ஸ் மாதிரி தான் நெனச்சேன்..
ஆனால் சங்கரோட பதிலப் படிச்சு திகிலாவும் இருந்தது.. சிரிப்பாகவும் இருந்தது...
அது சரி... நம்ம கோபி என்ன நெனச்சாராம்?
Post a Comment